-ஹனீபா-
கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு சம்மாந்துறையில் இன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண சமுக சேவைகள் பணிப்பாளர் என்.மணிவண்னன் தலைமைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சுகாதார மற்றும் சமுக சேவைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிக்கு மாகாணத்தை சேர்ந்த 45 சிரேஷ்ட பிரஜைகள் நினைவுச் சின்னங்களும் பொன்னாடைகள், சான்றிதழ் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கிழக்க மாகாணத்திலுள்ள 9 சிறந்த முதியோர் சங்கங்களும் 6 சிறந்த முதியோர் இல்லங்களும் நினைவுச் சின்னங்களும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
0 comments:
Post a Comment