ஜனாதிபதி மஹிந்தராஜபக் ஷ அவர்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் ஏழாவது ஆண்டுப் பூர்த்தியினையிட்டும் ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி தேசிய ரீதியில் பல்வேறு நிகழ்வூகள் நடைபெற்றதுடன் கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 70 க் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வூ என்பனவூம் இன்று (19) நடைபெற்றன.
இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வரயப் பாடசாலைகளிலும் பல்வேறு நிகழ்வூகள் நடைபெற்றன அந்ந வகையில் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லுhரியில் அதிபர் ஹபீறா சலீம் தலைமையில் இன்று நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.
அத்துடன் சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திலும் அதிபர் எம்.எம்.எம்.இப்றாஹீம் தலைமையிலும் இவ்வாறான நிகழ்வூ நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வின் பொது அதிதிகளால் மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment