காரைதீவு பிரதேசத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவந்த வீதி புனரமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பணித்துள்ளார்.
முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்தே செயலாளர் ஏ.எச்.எம்.அன்சாரை மேற்கண்டவாறு பணித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சால் ஜெய்க்கா திட்டத்தின் மூலம் கொங்கிறீட் பாதைகள் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் அபிவிருத்தி செய்;யப்பட்டுவருகின்றன. இதன் அடிப்படையில் காரைதீவு பிரதேசத்திலும் பாதைகளுக்கான புனரமைப்பு வேலைகள் இடம்பெற்றன. இதன்போது முறையற்ற விதத்தில் பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து இதனை விசாரணை செய்ய அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொறுப்பான அமைச்சரினால் கேட்கப்பட்டுள்ளது.
இப்பாதை புனரைமப்புப் பணிகளை காலம் தாழ்த்தாது உடன் மேற்கொள்ளும் வகையில் விசாரணைகளை விரைவுபடுத்தி உரிய முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பாதை அமைப்புக்கான உரிய நியமங்களை கடைப்பிடிக்கும் வகையில் எவ்வித பக்கச்சார்புமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளையும், சம்மந்தப்பட்ட தரப்பினரையும் அமைச்சர் வேண்டியுள்ளார்.
0 comments:
Post a Comment