1500 ரூபா பணத்தை அபராதமாகச் செலுத்திவிட்டு அவரை மீட்பதற்கிருந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் இவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
"நவம்பர் 4 ஆம் திகதி அவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் அவருக்கு 1500 ரூபா தண்டப்பணத்தை அபராதமாக விதித்தார். இருப்பினும் குறித்த பணத்தைச் செலுத்துவதற்கான வசதி எம்மிடம் இருக்கவில்லை இன்று
திங்கட்கிழமை (12.11.2012) குறித்த பணத்தைச் செலுத்திவிட்டு அவரை மீட்பதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் நேற்றுக் காலை எமது வீட்டுக்கு வந்த பொலிசார் அஸ்வர்தீன் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது சடலத்தைப் பொறுப்பேற்க வருமாறும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். பொலிஸ் பிரேத அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு தலையில் துப்பாக்கிச் சூடுபட்ட நிலையில் அஸ்வர்தீனின் சடலம் இருப்பதைக் கண்டு நாம் அதிர்ச்சியடைந்தோம்" என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான அஸ்வர்தீன் அன்றாட கூலித் தொழில்புரிபவர் எனவும் இவர் ஏன், எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதற்கான காரணத்தை இதுவரை பொலிசார் தம்மிடம் தெரிவிக்கவில்லை எனவும் அவரது தாயார் பாத்திமா கனி கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார்.
0 comments:
Post a Comment