
தென்கொரியாவின் மிருகக் காட்சிசாலையிலுள்ள யானை மனிதர்களைப் போன்று பேசுவதற்கு முயற்சி செய்து வருகின்றமை விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எவர்லான்ட் மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த 22 வயதான ஆசிய யானையான கொஷிக், கொரிய மொழியில் 5 சொற்களை மனிதர்கள் கூறுவதைப் பின்பற்றி கூறுகின்றமையை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த யானையின் உச்சரிப்பானது 67 வதவீதம் மனிதர்களை ஒத்ததாக அமைந்துள்ளது.
இதற்கு முன் 1983 ஆம் ஆண்டில் கஸகஸ்தானிலுள்ள மிருகக்காட்சி சாலையொன்றில் யானையொன்று ரஷ்ய மொழியில் 20 வசனங்களை சரியாக மீள உச்சரித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது.
எனினும் அச்சமயம் அந்தப் பேச்சு மொழி விஞ்ஞான ரீதியாக உறுதிபடுத்தப்படவில்லை.
0 comments:
Post a Comment