அம்பாறை மாவாட்டத்தில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளார் பிரிவூக்கட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவகளில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பையின் பணிப்புரைக்க அமைவாக டெங்கு நோய் தொடர்பான விளிப்புணர்வூ நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவினால் டெங்கு ஒளிப்பு தொடர்பான விளிப்புணர்வூ நடவடிக்கைகள் இன்று (26) ஆரம்பிக்கப்பட்டு விN~ட செயலணிகள் வீடு வீடாக சென்று விளிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பரீசோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆத்துடன் தேவையான இடங்களில் புகை விசிரும் நடவடிக்கைகளும் நடைபெற்று வரகின்றன.
இச்செயலணிகளில் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுh;த்தி உத்தியோகத்தர்கள் பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இந்த கொடிய டெங்கிலிருந்த மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் இந்த டெங்கை பரப்பக் கூடிய குடம்பிகள் உருவாகும் சுற்றுச் சு+ழலை வைத்திருப்போருக்க எதிராக சட்டநடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதுடன் ஐயாயிரம் தொடக்கம் ஐம்பதாயிரம் வரைக்குமான தண்டப்பணங்களும் அரவிட நடவடிக்கை ஏடுக்கப்பட்டு வரகின்றன.
0 comments:
Post a Comment