இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/17/2012

'முஸ்லிம்களின் மத்தியில் குடி வழிமுறை' நூல் வெளியீட்டு விழா

-ஹனீபா+பர்ஹான்-
கலாபூஷணம் எஸ்.அப்துல் றாஸீக் எழுதிய 'முஸ்லிம்களின் மத்தியில் குடி வழிமுறை'எனும் நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.  சம்மாந்துறை குடிமரைக்கார் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எல்.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சுர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நூலின் சமர்ப்பணவுரை நூலாசிரியர் எஸ்.அப்துல் றாஸீக்கும் ஆய்வுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாவும் நூலின் ஆற்றினர்.  நூலின் முதற்பிரதியை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா