ஹனீபா
ஒலுவில் பிரதான வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பஸ் நடத்துனரான கணேசமூர்த்தியின் மறைவையிட்டு அம்பாறை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் அனைவரும் இன்று வியாழக்கிழமை பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடாமல் துக்கம் அனுஷ்டித்தனர்.
அத்துடன் தனியார் பயணிகள் பஸ்கள் எதுவும் போக்குவரத்தில் ஈடுபடாது வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட துக்க அனுஷ்டிப்பில் அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களும் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்ட பயணிகள் போக்கவரத்தில் தனியார் பஸ்கள் எதுவும் ஈடுபடாததன் காரணமாக பயணிகள் போக்குவரத்துக்களை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.
0 comments:
Post a Comment