இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/09/2012

சாய்ந்தமருது–மாளிகைக்காடு வர்த்தகர் சங்க தலைவர் குயின்ஸ் கலீல் ஹாஜியாரின் திடீர் மறைவு


(ஹனிபா)
பிரதேச அபிவிருத்தியில் கூடிய அக்கறையுடன் முன்னின்று உழைத்து வந்த சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்க தலைவர் குயின்ஸ் கலீல் ஹாஜியாரின் திடீர் மறைவு பேரிழப்பாகும் என கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.  

வியாழக்கிழமை இரவு காலமான குயின்ஸ் கலீல் ஹாஜியாரின் மறைவு குறித்து மலேசியாவில் இருந்து அனுப்பி வைத்துள்ள அனுதாப செய்தியில் அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது;
"குயின்ஸ் கலீல் ஹாஜியாரின் மரணச் செய்தி கேட்டு நான் கடும் அதிர்ச்சியும் துக்கமும் அடைந்துள்ளேன்.
 
சாய்ந்தமருதுமாளிகைக்காடு பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டிலும் அவர் கொண்டிருந்த கரிசனையை நான் இந்த சந்தர்ப்பத்தில் மீட்டிப் பார்க்கின்றேன்.
 
இவற்றுக்காக அவர் காட்டிய ஆர்வமும் முயற்சிகளும் ஏனைய வர்த்தகப் பிரமுகர்களுக்கு நல்ல முன்னுதாரணங்களாக காணப்படுகின்றன.
 
தனிப்பட்ட வகையில் குயின்ஸ் கலீல் ஹாஜியார் எனது உறவினராக இருந்த போதிலும் பிரதேச அபிவிருத்திக்காக என்னுடன் முழுமையாக இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.
 
கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஊரின் அரசியல் அதிகாரம் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக எனது வெற்றிக்கு பக்க பலமாக இருந்துதேர்தல் நடவடிக்கைகளை மிகவும் அர்ப்பணிப்புடன் தலைமை தாங்கி முன்னெடுத்து சென்றார்.  
 
எதையும் பொது நோக்குடனும் யதார்த்த பூர்வமாகவும் சிந்திக்கும் ஒருவராக குயின்ஸ் கலீல் ஹாஜியார் திகழ்ந்தார். எந்த இடத்திலும் தனக்கு சரி எனப்பட்டதை வெளிப்படையாக பேசுகின்ற ஒருவராக அவர் இருந்தார்.
 
ஊர் மற்றும் சமூக விடயங்களில் எந்த உயர் சபையாக இருந்தாலும் எத்தகைய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் அவர்கள் முன்னிலையில் துணிச்சலுடன் குரல் எழுப்பி வந்த அவர் தனது கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருந்து வந்தார்.
 
இத்தகைய ஒரு உயர்ந்த மனிதரை எமது பிரதேசமும் சமூகமும் எதிர்பாரா விதமாக திடீரென இழந்திருப்பதானது மிகவும் கவலை தருகின்றது.
 
எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு மிகவும் உறுதுணையாகவும் சிறந்த ஆலோசகராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்து வந்த குயின்ஸ் கலீல் ஹாஜியாரின் திடீர் மறைவு தனிப்பட்ட வகையிலும் எனக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இதையிட்டு நான் பெரும் துயரம் அடைந்துள்ளேன்.
 
அன்னாரின் நல்ல சேவைகளைப் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை பரிசாக வழங்க எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா