(ஹனீபா)
நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலத்தில் நிலவிய அசாதாரன சூழ்நிலைக்குப் பின்னர் இந்தப் பிராந்தியங்களை அபிவிருத்தி செய்வதில் ஜனாதிபதி அவர்கள் கூடுதலான பணங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றார்.
2013ம் ஆண்டு நடைபெறவூள்ள தெயட்ட கிருள்ள வேலைத்திட்டத்துக்கு 15000 ஆயிரம் மில்லியன்களை இப்பிரதேச கல்விஇ சுகாதாரம், வீதி அபிவிருத்திகள் இதொலைத் தொடர்புகள் மற்றும் இன்னொரன்ன அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்புகள் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
டெலிக்கொம் நிறுவனத்தின் “எம். சாண்” நவீன தொலைத் தொடர்ப பரிவத்தனை நிலையத்தை (03)சம்மாந்துறைப் பிரதேசத்தில் தொன்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு அருகாமையில் திரந்து வைத்து உரையாற்றும் பொதே இவ்வாறு தொரிவித்தார்.
டெலிகொம் நிறுவனத்தின் கல்முனை பிரதேச முகாமையாளர் யோகேஸ்வரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் டெலிகொம் நிறுவனம் அரசசார்பு கம்பனியாகையினால் அதனை விரிவூபடுத்த மேலும் பலமில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டடுள்ளன இன்று நாம் திறந்து வைத்த நவீன பரிவத்தனை நிலையத்தினுhடாக உலகத்தை நொடிப்பொழுதில் ஒரு இடத்துக்கு கொண்டுவரக்கூடிய சேவையினை வழங்கக் கூடியதாகும் எனவூம் அமைச்சர் தெரிவித்தார்.
இவற்றை விஸ்தரிக்க அம்பாறை மாவட்டத்தில் 60 பரிவத்தனை நிலையங்களை அமைக்க 181 மில்லியன்களும்இ மட்டக்களப்பில் 47 நிலையங்களை அமைக்க 117 மில்லியனனும், திருகோணமலையில் 37 நிலையங்களை அமைக்க 74 மில்லியன்களும், பொலனறுவையில் 31 நிலையங்களுக்கு 90 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருவதாகவூம் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜே விக்ரம, கிழக்க மாகாண சுகாதார,சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், டெலிகொம் நிறுவனத்தின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் பத்மசுதன்,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹனக்க உட்பட பலர் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment