-ஹனீபா-
இலங்கை வங்கயின் கல்முனை பிரதேசத்தின் மூன்றாவது விரிவாக்கல் கிளை நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலய வீதியில் (02) திறந்து வைக்கப்பட்டது.
கடந்தகால யூத்தங்களினால் பாதிக்கப்பட்டு பின்தங்கிய நிலையில் காணப்பட்ட இப்பிரதேச மக்கள் வங்கிச் சேவைகளுக்காக பலமைல்களுக்கு அப்பாலுள்ள கல்முனை பிரதேசத்திற்கு சென்று வருவதில் பல இன்னல்களை எதிர்கொண்டு வருவதை கவனத்தில் கொண்டே இவ்வங்கிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் கல்முனை கிளை முகாமையாளர் வீ.ஆறுமுகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளாகளான எச்.எம்.முதியான், கே.எம்.முத்துகல, சந்தைப்படுத்தல் ஆலோசகர் இந்துநில்லி;யனகே, கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்த நடேசன், அம்பாரை பிராந்திய முகாமையாளர் .பிhpயந்த குமார,மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் ஜே.பிரபாகரண், நாவிதன் வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.ஆனந்தன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை வங்கியின் நாவிதன்வெளி பிரதேச கிளை முகாமையாளராக எஸ்.பகிரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment