(கொழும்பிலிருந்து ஹனீபா)
திவிநெகும திணைக்களத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதிக்கும்,அமைச்சர் பஸில் ராஜபக்~வூக்கும் நன்றி தெரிவித்தும், நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள திவி நெகும சட்ட மூலத்தை 2/3 பெரும் பான்மையூடன் நிறைவேற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கோரிய கவனயீர்ப்புப் போராட்டமும்,ஊர்வலமும்; நேற்று (06) பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து பாராளுமன்ற பிரதான வீதிமுளுவதும் பாரிய சுலேகங்கள் மற்றும் பாதாதைகளுடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக் கணக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி நலனுதவி பெறும் குடும்பங்கள், திவிநெகும திணைக்களத்தினுள் உள்வாங்கப் பட்டுள்ள ஏனைய நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் அத்துடன் சுயதொழில் முயற்சியாளர்களின் ஒன்றியம் உட்பட பல்வேறு தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள்; என்பன இந்ந ஆர்பாட்டத்திலும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment