இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/22/2012

ஆசிரியையின் கண்ணத்தில் குத்திய 5 வயது சிறுவன்


ஆசிரியையின் கண்ணத்தில் குத்திய 5 வயது சிறுவன் அப்பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் லண்டனில்  இடம்பெற்றுள்ளது.

இச்சிறுவன் ஆசிரியை மட்டுமல்லாது தன்னுடன் கல்விப் பயிலும் சக மாணவர்களிடமும் சேட்டைகளை புரிந்த்ததால் அவர் இந்த வருடத்தில் மட்டும் நான்கு முறை பாசாலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த லோகன் ஸ்டீட் என்ற சிறுவனே இவ்வாறு பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இம் மாணவன் தான் கல்விக் கற்கும் பாடசாலையில் படு சுட்டிப்பையனாக காணப்படுவதாக பாடசாலை நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
தனது வகுப்பு மாணவர்களை அடிப்பது, கடிப்பது, முகத்தில் குத்துவது பொருட்களை உடைத்து நொறுக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் இம்மாணவன் மீது பாடசாலை நிர்வாகம் அதிருப்தி கொண்டிருந்தது.

இந்நிலையில் வகுப்பிற்கு வந்த ஆசிரியையின் முகத்தில் சமயம் பார்த்து மேற்படி மாணவன் குத்தியுள்ளதால் பாடசாலை நிர்வாகம் இம்மாணவனை நிறந்தரமாகவே பாடசாலையை விட்டு நீக்கியது.

ஸ்டீவின் பெற்றோர் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர். 'ஸ்டீவ் மிகவும் சாமர்த்தியமான பையன். ஆனால் தற்போது அந்த சாமர்த்தியம் இல்லாமல் போகப்போகிறது அவன் இவ்வாறான குற்றங்களை புரிபவன் அல்ல' என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

'ஒரு 5 வயது சிறுவன் இவ்வாறான குற்றங்களை புரிந்ததால் பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என ஸ்டீவின் தந்தை தெரிவித்துள்ளார்.

'எனது பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது எனது கடமை. பாடசாலையில் பாதுகாப்பாக இருந்து செயலாற்றுவதற்கான சூழலை நான் அமைத்துக்கொடுக்க வேண்டும்' என மேற்படி பாடசாலையின் தலைமை ஆசிரியர் கிளாரி எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா