இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/30/2012

ஒபாமாவின் மகளுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள்

தனது மகளான மலியாவுக்கு அவரது ஆண் நண்பர்களிடமிருந்து அடிக்கடி அழைப்புகள் வந்த வண்ணமுள்ளதாக தந்தை ஒபாமாவும் தாயார் மிஷலும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏபிசி செய்தித் தொலைக்காட்சிக்கு அவர்கள் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது.
இப்போது மலியாவுக்கு கையடக்கத்தொலைபேசியை வழங்கி விட்டோம். ஆனால் அவர் யாருடன் பேசுகிறார் என்பதையெல்லாம் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை. இருந்தாலும் 'நீண்ட கயிறு' கொண்டு அவரை பிணைத்திருக்கிறோம்.

அதேசமயம், ஜனாதிபதி மாளிகையில் வசிப்பதால், செல்போன் பேச்சுக்கள் நிச்சயம் கண்காணிக்கப்படும் என்றார் மிஷல். அப்போது குறுக்கிட்ட ஒபாமா, எனது மகள்கள் பெரிய பொய் சொல்பவர்கள் என்று கூற முடியாது.
பெரும்பாலும் உண்மயைத்தான் பேசுவார்கள். எனது மகளுக்கு இப்போது அவரது ஆண் நண்பர்களிடமிருந்து நிறைய போன் அழைப்புகள் வருகின்றன என்றார் சிரித்தபடி. இந்த பேட்டியின்போது தங்களது 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை குறித்தும் ஒபாமாவும், மிஷலும் பேசினர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா