இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/21/2012

அம்பாறை மாவட்டத்தில் இன்று அதிகாலை மீண்டும் மழை

அம்பாறை மாவட்டத்தில் இன்று அதிகாலை மீண்டும் பெய்த மழைக் காரணமாக, ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் நீர் தேங்கத் துவங்கியுள்ளது. 

புதன்கிழமை இரவு முதல் நேற்று வியாழக்கிழமை நண்பகல் வரை மழை ஓய்ந்திருந்ததோடு, நேற்று காலை முதல் வெயிலுடன் கூடிய காலநிலையும் காணப்பட்டது. 

இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருந்த வெள்ளம் ஓரளவு வடிந்ததோடு, கடந்த சில நாட்களாக முடங்கிப் போயிருந்த இயல்பு வாழ்க்கையும் ஓரளவு வழமைக்குத் திரும்பியிருந்தது. ஆயினும், இன்று அதிகாலை முதல் பெய்த மழைக் காரணமாக வெள்ளம் வடிந்தோடுடிய பகுதிகளில் மீண்டும் நீர் தேங்கத் துவங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் தாழ் நிலப் பகுதிகள் அதிகமாக அமையப் பெற்றுள்ள மேற்குப் பகுதி குடியிருப்புகளே அதிகளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

குறிப்பாக, சுனாமியினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டுத் தொகுதிகள் அமைந்துள்ள பாண்டிருப்பு மேற்கு வட்டை, மருதமுனை 65 மீற்றர், நளீர் மாவத்தை மற்றும் பிரன்ச் சிற்றி போன்ற குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 

பாண்டிருப்பு மேற்கு வட்டை வீட்டுத் தொகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள அதேவேளை, குடியிருப்பு இடங்களில் பாம்புகள் அதிகளவில் தென்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போதும் பாண்டிருப்பு மேற்கு வட்டைப் பகுதியில் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்ததோடு, சிலர் பாம்புக்கடிக்கு உள்ளாகிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

மாவட்டத்தில் இன்று நண்பகலளவிலும் மழை பெய்ததோடு, வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா