இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/21/2012

சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நூல்கள் வெளிவர வேண்டும்: ஹக்கீம்

“யார் இந்த முஹம்மத் (ஸல்) ?” என்ற தலைப்பில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதித் தூதரின் வாழ்க்கை வரலாற்றை படங்கள் பல் பரிமாணங்களில் விளங்கப் படுத்தும் விதமாகவும், இறுதித் தூதருக்கெதிராக விரல் நீட்டப்படும் அவதூறுகளுக்கு அறிவார்ந்த ரீதியில் மறுப்புரைக்கும் வன்னமும் “யார் இந்த முஹம்மத் (ஸல்) ?” எனும் தலைப்பில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் 25 000 பிரதிகள் கொண்ட சிறப்பிதழ் ஒன்றினை நாடளாவிய ரீதியில் மாற்றுமத அன்பர்கள் மத்தியில் இலவசமாய் விநியோகிப்பதற்கு அந்த அமைப்பு எடுத்த முடிவுக்கு அமைவாக இந்த நூல் இன்று வெளியிடப் பட்டது
இன்று மாலை தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.ரியாஸ் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அரசியல்வாதிகள் ஆய்வாளர்கள் , ஆர்வலர்கள் , உலமாக்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்
.இந்த நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது . தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு பதில் கூறும் வகையில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நூல்கள் வெளிவர வேண்டும்.
முஸ்லிம்கள் வந்தான் வரத்தான்கள், அண்டி சுரண்டி பிழைக்க வந்தவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் முஸ்லிம் சமூகத்தை வன்முறைக்குள் உள்வாங்க வேண்டும் என சிலர் செயற்படுகிறார்கள் அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் கொடுத்து ,பகிர்ந்து வாழும் சமூகம் என்பதை புரியவைக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் இக் கால கட்டத்தில் இவ்வாரான பணி பாராட்டத் தக்கதாகும் எனவும் தெரிவித்தார்.
december-20-
234

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா