இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/20/2013

தாய்ப்பால் புரையேறியதால் 28 நாளான சிசு உயிரிழப்பு

VI:வவுனியா மூன்றுமறிப்பு பகுதியில் தாய்ப்பால் புரையேறியதால் 28 நாளேயான ஆண் குழந்தை பலியான சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குழந்தைக்கு தாய் பாலை கொடுத்து விட்டு குழந்தை நித்திரை என நினைத்து தாய் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த குழந்தை புரைக்கேறி மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சத்தியமூர்த்தியிடம் கேட்ட போது பிரேத பரிசோதனையின் பிரகாரம் சுவாசக் குழாயில் தாயின் பால் காணப்பட்டதாகவும் மூக்கின் வழியாக தாய்ப்பால் வழிந்திருந்ததை அவதானிக்க முடிந்திருந்ததாகவும் தெரியவந்ததுடன் தாய்ப்பால் புரையேறி குழந்தை இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குழந்தையின் இறுதிக்கிரியைகள் நேற்று மூன்றுமுறிப்பு மயானத்தில் இடம்பெற்றன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா