இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/20/2013

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி சொத்துக்களை சூறையாடுவதற்குத் திட்டம்: முஜிபுர்


VI:முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி சொத்துக்களை சூறையாடும் சதித்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் இதனை மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை மகரகமவிலுள்ள நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்துக்கு முன்பாக பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய என்ற அமைப்பும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.

நோலிமிட் நிறுவனத்தை மூடுமாறும் முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க வேண்டாம், கடைகள்,வீடுகளை வழங்க வேண்டாம் என சிங்கள மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் இதனைத் தடுக்காது பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அதேபோன்று அண்மையில் தெஹிவளை, சரணங்கர வீதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவு விற்பனை நிலையத்தை இரண்டு பிக்குமாறு மூடுமாறு அறிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கிலும் முஸ்லிம் ஒருவரின் சில்லறைக் கடையை பிக்குமார் வந்து மூடுமாறு தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று நாடு முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை சிங்கள பேரினவாத சக்திகள் முன்னெடுத்து வருகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிட்டு 1815ஆம் ஆண்டைப்போன்று கலவரத்தைத் தூண்டிவிட்டு முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா