விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றுவது அரசின் கடமை என்று ஜெயலலிதா கூறினார். கடந்த சில நாட்களாக சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் அரசுக்கு எதிராக தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது என்று கூறிய ஜெயலலிதா, படத்தில் ஆட்சேபமான காட்சிகள் இருப்பதால் தடை செய்ய சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார். மேலும், தமிழகம் முழுவதும் 524 திரையரங்குகள் உள்ளதாக கூறியுள்ள ஜெயலலிதா, 524 திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது சாத்தியமற்றது என்று கூறினார். விஸ்வரூபம் படம் வெளியானால் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக சில முஸ்லீம் அமைப்புகள் அறிவித்ததால், தமிழக அரச இந்த தடை விதித்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment