ஜன. 31 - 2015 -ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அணியில் இர்பான் பதானுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் நடந்தது. இதில் இந்தியா 3 - 2 என்ற கணக்கில் தொடரை வென்றது.
கடைசிப் போட்டிக்குப் பிறகு பேசிய தோனி 2015 -ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அணிக்காக 15 பேர் கொண்ட வீரர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்வுக் குழுவினர் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் உலகக் கோப்பைகான 15 பேர் கொண்ட அணியில் இர்பான் பதான் இடம் பெறவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார் தோனி. இது தொடர்பாக அவர் கூறியதாவது -
உலகக் கோப்பை அணியில் இந்தியா சிறப்பாக செயல்பட பந்து வீச்சு ஆல்ர வுண்டர் தேவை. இதில் தற்போது ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.
அவர் சுழற் பந்து ஆல்ரவுண்டராக திக ழ்கிறார். இதே போல வேகப் பந்து ஆல்ரவுண்டராக இர்பான் பதான் முக் கிய பங்கு வகிப்பார் என்று நம்புகிறேன்.
இதனால் அவர் அணியில் இடம் பெறுவதை விரும்புகிறேன். 7 மற்றும் 8-வது வரிசையில் இருவரும் இடம் பெற்றால், எங்கள் திட்டப்படி செயல்பட முடியும். அணியும் சமனிலையோடு இருக்கும்.
காம்பீர் தனது ஆட்டத்தில் முன்னேற்ற ம் அடைவார் என்று நம்புகிறேன். சுழற் பந்தை அடித்து ஆடுவதில் அவர் பிரமாதமானவர் என்பதை யாரும் மறந்து விட முடியாது.
அவர் 30 முதல் 45 ஓவர் வரை களத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு தோனி கூறியுள்ளார்.
காம்பீர் கடந்த 8 ஆட்டத்தில் விளையாடி 156 ரன்களே எடுத்து உள்ளார். மோசமான பேட்டிங்கில் இருக்கும் அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால் தோனி அவருக்கு ஆதரவான நிலையில் உள்ளார்.
2015 -ம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தான் அவர் ரோகித் சர்மாவை துவக்க வீரராக இறக்கி முன்னோட்டம் பார்க்கிறார். சேவாக் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
இதனால் காம்பீருடன், ரோகித் சர்மாவை துவக்க வீரராக ஆட வைக்கிறார். தோனியின் இந்த முடிவுக்கு பலன் இருக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment