இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/16/2013

இரண்டாம் கட்ட தலைமைத்துவ பயிற்சி இன்று ஆரம்பம்

AD :
இரண்டாம் கட்ட தலைமைத்துவ பயிற்சி இன்று ஆரம்பம்
உயர் கல்வியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்திவரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் இரண்டாம் கட்டம் இன்று (16) ஆரம்பிக்கப்படுகிறது. 

2013 பெப்ரவரி முதலாம் திகதிவரை இந்த இரண்டாம் கட்ட தலைமைத்துவப் பயிற்சி நடைபெறவுள்ளதுடன் இம்முறை 7860 மாணவர்கள் தலைமைத்துவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்தது. 

இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் இம்முறை நாடளாவிய நீதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 7860 மாணவர்களும் 22 நிலையங்களில் தமது பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. 

இரண்டாம் கட்டத் தலைமைத்துவப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

ஏதாயினும் காரணத்தினால் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட இணையத்தளத்தில் தமது பெயர்களைப் பார்வையிட்டு அதன் பிரதியொன்றுடன் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்களுக்குச் செல்ல முடியும் என உயர் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜீ. ஜயசிங்க தெரிவித்தார். 

மூன்றாம் கட்ட தலைமைத்துவப் பயிற்சி இடுத்த மாதம் 12ம் திகதி தொடக்கம் பெப்ரவரி 28ம் திகதிவரை நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

உயர் கல்வியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகியன இணைந்து இந்த தலைமைத்துவப் பயிற்சியை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.     

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா