இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/16/2013

க.பொ.த சா/த பரீட்சையை தவரவிட்டவர்களுக்கு அடுத்த மாதம் விசேட பரீட்சை

AD : வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சில பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இலக்காகி க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்களுக்கென விசேட பரீட்சை அடுத்த மாதம் 9ம், 10ம், 11ம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளன. 

இதற்கான விண்ணப்பப்பத்திரங்களை ஏற்கும் இறுதித் திகதி நேற்றுடன் முடிவடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெப்ரவரி 9, 10, 11ம் திகதிகளில் இப்பரீட்சையை நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் செயலகம் தெரிவித்தது. 

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பாடசாலை அதிபருக்கூடாகவும் வெளிவாரிப் பரீட்சார்த்திகள் நேரடியாகவும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்கனவே பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். 

இதற்கமைய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளரின் செயலகம் தெரிவித்தது. 

நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த மாதம் 17, 18, 19ம் திகதிகளில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாத நிலை தோன்றியது. 

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு அடுத்த மாதம் விசேட பரீட்சையை இம்மாண வர்களுக்காக நடத்தவுள்ளது.      

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா