இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/13/2013

ஷிராணியைப் பதவி நீக்கினார் ஜனாதிபதி

BBC : இலங்கையின் தலைமை நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்து நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஷிராணிக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவந்திருந்த கண்டன பதவிநீக்கத் தீர்மானத்தை ஆதரித்து நாடாளுமன்றம் வாக்களித்து ஓரிரு நாட்களில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு வருகிறது.

ஷிராணியை பொறுப்பிலிருந்து அகற்றும் உத்தரவில் ஞாயிறு காலை ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக அவருடைய அலுவலகம் பிபிசியிடம் தெரிவித்தது.


இந்த உத்தரவு கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிடம் கிடைத்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவு குறித்து உடனடியாக கருத்து வெளியிடுவதற்கு ஷிராணி மறுத்துவிட்டார்.


கண்டன பதவிநீக்க நடைமுறையில் முறைகேடுகள் இருக்கின்றன என்றும், இது சட்டத்துக்கு புறம்பானது என்றும் நாட்டின் உச்சநீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், தலைமை நீதியரசர் பொறுப்பிலிருந்து அகல ஷிராணி மறுக்கவும் வாய்ப்புள்ளது.


"நீதித்துறை சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்க வேண்டும்" என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா