இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/07/2013

பெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும் ரோபாட் காலணி.!


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ரோபாட் காலணியை உருவாக்கி உள்ளனர் மராட்டிய மாநிலம் தானேயைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள்.


இந்த காலணியின் அடிப்பகுதியில் 5 வோல்ட் மின்னழுத்தம் இருக்கக்கூடிய மின்சார சுற்று பொருத்தப்பட்டுள்ளது, சமூக விரோதிகள் யாரினும் நெருங்கி வந்தால் காலணியை 2 முதல் 3 தடவை தரைப்பகுதியில் வேகமாக உதைத்து அழுத்தம் கொடுத்தால், மின்சார சுற்று செயல்பட தொடங்கிவிடும். அப்போது காலணியில் பொருத்தப்பட்ட வயர்லஸ் அலாரம் ஒலி எழுப்பும். 

மேலும் ப்ளூடூத் சேவை மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி மற்றும் எங்கே இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தவும் செய்யும், விமானத்தில் உள்ளதைப்போல கருப்புப்பெட்டியும் பொருத்தப்பட்டிருகிறது, 

அது அங்கே நிகழும் சம்பவத்தை முழுமையாக பதிவு செய்யும். பாதுகாப்புக்காக, மிளகாய்ப்பொடி, தற்காப்பு கலைகள்னு பிரத்யேக தயார் நிலைக்கு இடையே எப்போதும் கூடவே இருக்கும் இந்த காலணிகள், சிறந்த பாதுகாப்பு ஆயுதம் என்கின்றனர் இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள். 

இவர்கள், 9 - ஆம் வகுப்பு மற்றும் 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் அறிவிக்க விரும்பினால் கீழ் உள்ள F என்பதை அழுத்தி Facebook மூலம் அறிவிக்கலாம்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா