LM :பல்கலைக்கழக மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட
தலைமைத்துவ பயிற்சிகள் இன்றைய தினம் ஆரம்பமாவதாக உயர் கல்வி அமைச்சு
தெரிவித்துள்ளது. அதேவேளை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணி முஸ்லிம்
மாணவ, மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சுடன் பேசியுள்ளதாக அறிவித்துள்ளது.
முஸ்லிம் மாணவ, மாணவியர் எதிர்கொள்ளும்
ஹலால் உணவு பிரச்சினை , ஜும்ஆ தொழுகை பிரச்சினை , முஸ்லிம் பெண்களுக்கு
பெண் பயிற்சியாளர்களை பெற்றுகொள்ளுதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக
பேசப்பட்டுள்ளதாககவும் இவற்றுக்கு சாதகமான முறையில் தீர்வு
கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
அதேவேளை இன்று இரண்டாம் கட்ட பயிற்சியில் 7
ஆயிரத்து 860 மாணவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.நாடு முழுவதும் தெரிவ
செய்யப்பட்ட 22 மத்திய நிலையங்களில் இவர்களுக்கு பயிற்சிகள்
வழங்கப்படவுள்ளது.இந்தநிலையில், முதல் கட்டமாக நடைபெற்ற மாணவர்களுக்கான
தலைமைத்துவ பயிற்சிகளுக்கு 90 சதவீதமான மாணவர்கள் கலந்துக் கொண்டதாக உயர்
கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .
கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி தொடக்கம்
ஜனவரி 12 ஆம் திகதி வரையில் முதலாம் கட்ட பயிற்சிகள் இடம்பெற்றன.இந்த
நிலையில் இந்த பயிற்சி நெறியில் மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம்
12 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 comments:
Post a Comment