(ஹனீபா)
2016ம் ஆண்டளவில் ஆசியாவின் அதிசயமிக்கதோர் நாடாக இலங்கையினை மிளிரச் செய்யவேண்டுமென்பதே அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் குறிக்கோளாகும் அதனை அடைந்து கொள்ள நாம் அனைவரும் ஒன்றினைந்து உழைக்க வேண்டும் என ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் தெரிவித்தார்.

வறுமையற்றதோர் இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவற்காடு மற்றும் பனங்காடு ஆகிய கிராம மக்களை விளிப்பூட்டும் வகையில் நேற்று (21) மாலை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் செல்வி பிரதீபா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசாங்கம் குறித்த இலக்கை அடைந்து கொள்ள திவிநெகும திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இத்திட்டமானது அரசுக்கும் பொதுமக்களுக்கும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதுடன் நேரடியாக அபிவிருத்தித் திட்டங்கள் மக்களை சென்றடைய வாய்பளிப்பதுடன் எமது பிரதேசத்தின் பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்திக் கொள்ள முடியும் அத்துடன் எமது பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன அவர்கள் நியமிக்கப்பட்டடுள்ளார் அவரூடாக எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.பி. ரவிச்சந்திரன், எஸ்.எல்.எம்.அன்வர் விவசாய போதனாசிரியர் தர்ஷpனி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.ஜெயந்தி உட்பட பட்டதாரி பயிலுனர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment