இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/21/2013

ஆலையடி வேம்பு பிரதேச செயலக சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

(ஹனீபா)
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் புரிந்துணர்வையும் சௌஜன்யத்தையும் ஏற்படுத்தும் நோக்குடன் பொலிஸ்; மா அதிபர் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் நாட்டின் சகல பிரதேசங்களிலும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் நிறுவப்பட்டு சிறப்பான முறையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை நாம் காணலாம் இதனை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம் பெற்றுவந்த குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளன இவ்வாறு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி டீ.சீ.டீ.தென்னக்கோண் தெரிவித்தார்.

ஆலையடி வேம்பு பிரதேச செயலக சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று (21) அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி டீ.சீ.டீ.தென்னக்கோண் அவர்களின் தலைமையில் நவரெட்னராஜா அரங்கில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்;.

இந்நிகழ்வில் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் சிவில் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி அப்துல்லாஹ், நிர்வாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரம், கிராம உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்ப குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் கிராமத்தின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா