(ஹனீபா)
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இன்று (28) இலங்கை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்தார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய பொறியியல் பீடம் ஆரம்பித்தல் மற்றும் குவைத் அரசாங்கத்தினால் 600 மில்லியன் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதியினையும், இலங்கை குவைத் நாடுகளுக்கிடையிலான நட்புறவுத் தூபி என்பவற்றை வைவரீதியாக எதிர்வரும் பெப்ரவரி 05ம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப் படவுள்ளது.
ஜனாதிபதியின் வருகையையிட்டு இது தொடர்பான முன் ஏற்பாடுகளை ஆயத்தம் செய்யும் முகமாகவே இவ் விஜயம் அமைந்தது அத்துடன் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தலைமையில் பல்கலைக் கழக வளாகத்தில் கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இங்கு மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆரயப்பட்டு அதற்கான முடிவுகளும் மேற்க் கொள்ளப்பட்டது.
இக் கூட்டத்தில்; அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, மாகாணசபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் உற்பட பொலிஸ் அதிகாரிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









0 comments:
Post a Comment