இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர் குழுவின் தலைவராக முன்னாள் அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர் குழுவின் பெயரை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரியவை தலைவராக கொண்ட இந்த குழுவில் பி.விக்ரமசிங், எச்.விக்ரமசிங்க, சமிந்த மெண்டிஸ் மற்றும் எரிக் உபுசாந்த ஆகியோர் உறுப்பினராகவுள்ளனர்.TM






0 comments:
Post a Comment