VI :கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த கல்லூரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. கணேசநாதனுக்கு கிடைத்த தகவலையடுத்து மகளிர் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் தகவல் தருகையில்,
உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகள் குறித்த நபரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு;ளளனர். இவர்களை வாகனத்தில் வத்தளைப் பகுதிக்கு அழைத்துச் சென்ற 34 வயதுடைய குறித்த நபர் குளிர்பானத்துக்குள் மயக்க மருந்தினை கலந்து கொடுத்து இந்தச் செயலை புரிந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தனித்தனியாகவே இந்த மாணவியர் இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மாணவிகள் தமது பெற்றோரிடம் தெரிவித்திருந்தபோதிலும் முறைப்பாடு செய்யப்படவில்லை. இவ்விவகாரம் பாடசாலைக்கு தெரியவந்ததையடுத்து குறித்த இரு மாணவிகளும் பாடசாலையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர் இதற்கு முன்னரும் பாடசாலை மாணவியொருவரை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் வவுனியாவைச் சேர்ந்த மாணவிகளது புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.







0 comments:
Post a Comment