(சுவைர் மீரான்)
கலாநிதி சிராணி பண்டாரநாயக்க அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை,
பாராளுமன்றத்திற்கும் நீதித் துறைக்கும் இடையிலான சட்டச் சிக்கல்கள், கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் மற்றும் சகோதரி ரிசானா நபீக் மீதான மரணதண்டனை போன்ற
விடயங்களில் இலங்கை மக்களினதும், உள்நாட்டு ஊடகங்களினதும்
கவனம் திரும்பியிருந்த நிலையில், 1990 களில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள்
மீது பாய்ந்து இனச் சுத்திகரிப்பு செய்து, இரத்த வேட்டையாடிய புலிப்
பயங்கரவாதிகளின் எச்ச சொச்சங்களில் சில, சத்தமில்லாமல் ஒரு முஸ்லிம் அரச அதிகாரியின் யாழ்ப்பாணத்திற்கான பணி நியமனத் தை வேட்டையாடி விழுங்கி
ஏப்பம் விட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறி போராடி வந்த புலிகள் அமைப்பினர், தமிழர்களும், தமிழர் வரலாறும் வெட்கித் தலை
குனியும் விதமாக 1990 களில் அப்பாவி முஸ்லிம்கள்
மீது பாய்ந்தனர். இந்நாட்டின் தமிழர் வரலாற்றின் அவமானம் நிறைந்த அந்தப் பக்கங்களில் எழுதப்படும் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றுதான் யாழ் முஸ்லிம்கள் இரண்டு மணி நேரத்தில் பலாத்காரமாக வெறுங்கையுடன் வெளியேற்றப் பட்ட கேவல நிகழ்வாகும்.
(ஜினூஸ்)
அன்று
புலிப் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் புரிந்த கொடூரத்தை, இன்று
புலிகளின் அடிவருடிகள் பேனா முனையில் செய்கின்றனர். இதனை மனச்சாட்சியுள்ள,
நியாயமாகச் சிந்திக்கும் எந்தத் தமிழருமே
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
புலிப்
பயங்கரவாதம் யுத்த முனையில் தோற்கடிக்கப் பட்டு, நாட்டில் அமைதியை
ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுவரும் நிலையில், 1990 களில்
வெறுங்கையுடன் வெளியேற்றப் பட்ட யாழ் முஸ்லிம்களின்
மீள்
குடியேற்றம் என்பது மட்டும் மிகவுமே பின்தங்கி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போன்ற ஒரு நிலையில், கட்டெறும்பும் கூட ஊர்ந்து
செல்ல முடியாமல் மூச்சிழுத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், யாழ்ப்பாணத்தில் சேவையாற்றி வந்த
ஒரே ஒரு முஸ்லிம் கிராம அலுவலரும் கூட, யாழ்ப்பாணத்தில் பணி புரிய முடியாத நிலைமைகள் செயற்கையாக
ஏற்படுத்தப் பட்டதன் காரணமாக யாழ்ப்பாணத்தைத் துறந்து வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்ட அவமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ் மாநகர பிரதி மேயர் சட்டத்தரணி ரமீஸ்
உட்பட பல்வேறு சமூக நலன் விரும்பிகள் விடுத்த அன்பு வேண்டுகோளை
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, மீண்டும் யாழ்ப்பாணத்தில் பணிபுரியும்
வாய்ப்பிற்காக ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்தார் கிராம அலுவலர் ஜனாப்
எம். எஸ். எம். ஜினூஸ் அவர்கள்.
யாழ்ப்பாணத்தில்
பணிபுரிவதற்கான இடமாற்றத்திற்காக இவர் 2010 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே விண்ணப்பித்திரு ந்த பொழுதும், யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு சில அதிகாரிகளால் இவரது இடமாற்ற உத்தரவு வேண்டுமென்றே இழுத்தடிக்கப் பட்டு, இறுதியாக கடந்த 2012 மே மாதம் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றார்.
1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சோனகதெரு பிரதேச கிராம
கிராம அலுவலராக முதன் முறையாக நியமனம் பெற்ற ஜனாப் எம்.எஸ்.எம். ஜினூஸ்
அவர்கள், 1990 ஆம் ஆண்டின் பின்னர் கம்பஹா மாவட்டத்தின் மினுவன்கொட,
நீர்கொழும்பு, மஹர, உடுகம்பொல போன்ற பிரதேசங்களில் சிங்கள மொழி மூலம்
கடமையாற்றியுள்ளார். மும்மொழிகளிலும் கடமையாற்றும் திறன் படைத்த ஜனாப்
ஜினூஸ் அவர்கள், நீர்கொழும்பு பிரதேச செயலகத்தில் பகுதிநேர தமிழ் - சிங்கள
மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
(ரமீஸ்)
மும்மொழிகளிலும்
கடமையாற்றும் திறன் படைத்த ஜனாப் எம்.எஸ்.எம்.ஜிநூஸ் அவர்கள் 2001 ஆம்
ஆண்டு முதல் நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் புகழ், செல்வாக்குடன்
பணியாற்றி வந்த பொழுதும் கூட, தான் பிறந்த யாழ்
முஸ்லிம் மண்ணின் நலனைக் கருத்தில் கொண்டு, யாழ் சோனகதெருவின் கஷ்டமான சூழ்நிலைகளின் கீழ் பணியாற்ற முன்வந்திருந்தார்.
எனினும் இவரது நியமனம் குறித்து விரோத மனப்பான்மையுடன் செயல்பட்ட யாழ் பிரதேச செயலக உயர் அதிகாரிகள், முஸ்லிம்கள்
அதிகமாக வாழும் J 87 பிரிவிற்கு இவரை நியமிக்காமல், J 86 பிரிவிற்கு
இவரை வலுக்கட்டாயமாக நியமித்தனர். இது தொடர்பில் யாழ்ப்பாண முஸ்லிம்
மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவே, யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன
பிரதிநிதிகள், அப்போதைய யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்
அவர்களைச் சந்தித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து யாழ், கிளிநொச்சி
முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகளுக்கும், யாழ் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.
தெய்வேந்திரம் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று 2012.05.11 அன்று யாழ்
பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் பொழுது, 'இன்னும் சில
மாதங்களில் ஜனாப் ஜினூஸ் அவர்களிடம் J 87 பிரிவும் கையளிக்கப்படும்' என்ற
வாக்குறுதி யாழ் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது.
1990
ஆம் ஆண்டு, யாழ் முஸ்லிம்கள் 2 மணி நேர அவகாசத்தில் வெறுங்கையுடன்
வெளியேற்றப் படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், புலிகளின் யாழ் மாவட்டத்
தலைமையைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் சிலர், 'யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்களா' என புலிகளிடம் வினவிய பொழுது, 'யாழ்
முஸ்லிம்களை ஒரு பொழுதும் வெளியேற்ற மாட்டோம்' என்றே புலிகள் வாக்குறுதி வழங்கியிருந்தனர். ஆனாலும் ஒரு சில நாட்களிலேயே தமது வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட புலிகள், முஸ்லிம்களை வெளியேற்றினர்.
2012.05.11 அன்று நடைபெற்ற சந்திப்பில் யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனப் பிரதிநிதிகளிடம், 'ஜனாப்
ஜினூஸ் அவர்கள் J 87 பிரிவிற்கான கிராம அலுவலராக சில மாதங்களில் நியமிக்கபடுவார்' என யாழ் பிரதேச செயலாளர் திருமதி எஸ். தெய்வேந்திரம் அவர்கள் வாக்குறுதி வழங்கிவிட்டு,
ஒரு சில மாதங்களிலேயே தனது வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, ஜனாப்
ஜிநூஸ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலைகளை
செயற்கையாக உருவாக்கி,
அவரை யாழ்ப்பாணத்தை விட்டும் வெளியேற நிர்ப்பந்தித்த நிகழ்வானது, மேலே உள்ள பந்தியில் குறிப்பிடப் பட்டுள்ள புலிகளின் செயலை ஒத்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
இலங்கையின் வேறெந்தக் கிராம அலுவலருக்கும் இல்லாத கடும் கட்டுப்பாடுகளும், நிர்ப்பந்தங்களும் யாழ் பிரதேச
செயலாளரால் ஜனாப் ஜினூஸ் மீது பிரயோகிக்கப்பட்டன. ஜனாப் ஜினூஸ் அவர்கள் உத்தியோகபூர்வ விடுமுறையில் இருந்த பொழுது, தொலைபேசியில் தொடர்புகொண்ட யாழ் பிரதேச செயலாளர் அவர்கள், தனது குரலை மாற்றி, அநாகரீகமான முறையில் பேசியுள்ளார். ஜனாப் ஜினூஸ் அவர்களால் உறுதிப் படுத்தப்பட்ட ஆவணங்களுக்கு
எவ்வித மதிப்பும்
வழங்கப்பட்டிருக்கவில்லை. அரசால் அனுமதிக்கப் பட்ட விடுமுறைகளைக் கூட உரிய
முறையில் பெற்றுக் கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை ஜனாப் ஜினூஸ் மீது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது.
யாழ் பிரதேச செயலாளரை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு முயற்சித்த பொழுதும், அதற்கும் கூட
யாழ் பிரதேச செயலாளர்
மறுப்புத் தெரிவித்து விட்டிருந்த நிலையில் இதற்கு மேலும் யாழ்ப்பாணத்தில்
கடமையாற்ற முடியாது என்ற சூழ்நிலை உருவாக்கப் பட்டிருப்பதனை தெளிவாகவே உணர்ந்துகொண்ட
யாழ்ப்பாணத்தின் ஒரே ஒரு முஸ்லிம் கிராம அலுவலரான ஜனாப் ஜினூஸ் அவர்கள்
மீண்டும் நீர்கொழும்பிற்கே மாற்றலாகிச் சென்றுவிட்டார்.
1990 ஆம் ஆண்டு முதல்
பல்வேறு பட்ட சிக்கல்களையும், பின்னடைவுகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் யாழ்ப்பா ண முஸ்லிம்களுக்கு இந்நிகழ்வு இன்னுமொரு பாரிய அடியாகும்.
யாழ்ப்பாணத்திiல் இடம்பெற்ற இக்கேவலமான
நிகழ்வு குறித்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கெளரவ ஜோன் அமரதுங்க
அவர்களுக்கோ, ஜனாதிபதிக்கோ அல்லது கெளரவ அமைச்சர் டக்லஸ் தேவானந்தா
அவர்களுக்கோ அல்லது கெளரவ அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களுக்கோ இதுவரை எவ்வித முறைப்பாடும் செய்யப்படவில்லை என்றே அறிய முடிகின்றது.
உரியவர்களிடம்
முறைப்பாடுகளை முன்வைப்பது குறித்தும், சாத்தியமான சட்ட நடவடிக்கைகள்
குறித்தும் விடய ஞானம் உள்ள சமூக ஆர்வலர்கள் கவனம் செலுத்தும் அதே வேளை,
யாழில் ஜனாப் ஜினூஸ் அவர்களை கடமையாற்ற விடாமல் தடைசெய்த சமூக விரோத/ தேச
விரோத காரணிகளை முற்றாகக் களைந்து, முஸ்லிம் கிராம அலுவலர் ஒருவர்
யாழ்ப்பாணத்தில் கெளரவமாகக் கடமையாற்றக் கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிப்பது
அரசினதும் அமைச்சர்களினதும் மட்டுமல்லாது, நியாயமான சிந்தனை உள்ள தமிழ்
அன்பர்கள் அனைவரினதும் கடமையாகும்.









0 comments:
Post a Comment