இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/19/2013

இலங்கையின் டெஸ்ட் தலைவராக திலின கண்டம்பி?


TM: இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக திலின கண்டம்பி நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்தன, இலங்கை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணியின் டெஸ்ட் அணித்தலைவராக அவுஸ்ரேலியத் தொடர் வரை பதவி வகித்த மஹேல ஜெயவர்தன, தனது இறுதி சர்வதேசத் தொடராக அவுஸ்ரேலிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

இத்தொடரின் பின்னர் சாதாரண வீரராகப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மஹேல ஜெயவர்தன பதவி விலகிய பின்னர் இலங்கை டெஸ்ட், ஒருநாள் அணிகளின் தலைவராக அன்ஜலோ மத்தியூஸ் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

எனினும் தற்பொது வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் திலின கண்டம்பிக்கு டெஸ்ட் அணித்தலைமை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணி சார்பாக இதுவரை டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றியிருக்காத திலின கண்டம்பி, 38 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 5 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு டெஸ்ற் அறிமுகமும் வழங்கப்பட்டு, அணித்தலைமையும் வழங்கப்படவுள்ள ஆங்கிலப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

மஹேல ஜெயவர்தன தவிர, அண்மைக்காலமாகத் தடுமாறி வரும் சிரேஷ்ட வீரரரான திலான் சமரவீரவும் இலங்கை அணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திலான் சமரவீர அவுஸ்ரேலியத் தொடரில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததோடு, மஹேல ஜெயவர்தன நீண்டகாலமாக டெஸ்ற் போட்டிகளில் தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா