இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/19/2013

பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்தக் கோரி கையெழுத்து வேட்டை


TCN :மூதூர் பீஸ் – ஹோம் நிறுவனத்தோடு இணைந்து மூதூரில் செயற்படும் மஜ்லிஸ் அஸ் – ஸுறா, உலமா சபை, கதீப்மார்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியன ஒன்றிணைந்து பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்தக் கோரி கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
பெண்கள் வெளிநாடு செல்வதினால் ஏற்படுகின்ற சமூக சீரழிவுகளை தடுக்கும் வகையில் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதனை நிறுத்தக்கோரி பத்தாயிரம் பேர்களின் கையெழுத்துடன் அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்புவதற்காகவே பொது மக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்படுகின்றன.
பொதுமக்கள் கையெழுத்திடும் முயற்சியில் பெரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக மஜ்லிஸ் அஸ்-ஸுறா தலைவர் மௌலவி எம்.எம்.கரீம் நத்வி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா