அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் இயந்திரப் படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதி வழங்குமாறு இலங்கைத் துறைமுக அபிவிருத்தி பிரதிஅமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனாவிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பிரதியமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது.
கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலை நிலை காரணமாக அடிக்கடி கடல் கொந்தளிப்புக்கள் இடம் பெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள் இதன் போது கடற்றொழில் பாதிக்கப்படுகின்றன இக்காலப் பகுதிகளை மீனவர்களின் இயந்திரப் படகுகளை அவ்வப் பிரதேசங்களிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் அல்லது படகுத் தரிப்பிடத் துறைகளில் பாதுகாப்பாக கொண்டு நிறுத்துவதே வழக்கமாகும்.
ஆனால் அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த தரிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆதனால் இப்பகுதி மீனவர்கள் கடல் கொந்தளிப்பு மற்றும் அனர்த்தங்கள் இடம் பெறும் காலப்பகுதிகளில் தமது மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பாக தரித்து வைப்பதில் பெரும் சிரமங்களையும் சவால்களையும் எதிர் நேக்கி வருகின்றனர் சில வேளைகளில் இம் மீன்பிடிப் படகுகள் அனர்த்தங்களில் சிக்கி சேதமடைகின்றன இதனால் இப் பகுதி மீனவர்கள் நஷ;டமடைவதுடன் அதனை நம்பி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தொழில் வாய்ப்புக்களையும் இழக்க நேரிடுகின்றது.
துற்போது இப்பதுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதால் அம்பாறை மாவட்ட மீனவர்கள் இப்பிரச்சினைகளை வெகுவாக எதிர் நோக்கியுள்ளனர். கடந்த வருட முற்பகுதியில் இதே போன்றதொரு நிலைமை ஏற்பட்டபோது ஒலுவிலில் அமைக்கப்பட்டு வருகின்ற துறைமுகத்தில் படகுகள் அனைத்தையும் நங்கூரமிடுவதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருந்தமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகி;;ன்றேன்.
ஆகையினால் தற்போதைய காலநிலை சீர்கேடு மற்றும் கடல் கொந்தளிப்பைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்ட மீனவர்களின் படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து உதவுமாறும் அக்கடிதத்தில் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் வலியுறுத்தியுள்ளார். இத்துடன் இக் கடிதத்தின் பிரதிகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment