நேற்று முந்தினம் (08) அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் சிங்காரபுரி ஆற்றில் நீராடிய போது காணமல் போன ஆசிரியர் இன்று மாலை (10) சடலமாக மீடகப்பட்டுள்ளார்.
கல்முனை பான்டிருப்பை சேர்ந்த வெள்ளக்குட்டி கனகரத்தினம் வயது (48) எனும் ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நிந்தவூர் அட்டப்பள்ளம் முஸ்லீம் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் அவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாடசாலையிலிருந்து அட்டாளைச் சேனை திராய்க்கேணி கிராமத்திலுள்ள தனது சகோதரரின் வீட்டுக்கு செல்லும் வழியிலுள்ள அட்டப்பள்ளம் சிங்காரபுரி ஆற்றின் பாலத்தின் கீழ் நீராடிய போது வெள்ளநீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்மாந்துறைப் பொலிஸாரும் உறவினர்களும் தேடுதல் நடத்தி வந்த நிலையில் அந்த ஆற்றில் சற்று தொலைவிலிருந்து இன்று மதியம் சடலமாக மீடகப் பட்டுள்ளார்
.
மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment