இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/19/2013

தேசிய காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திலிருந்து முக்கியஸ்தர்கள் பலர் வெளிநடப்பு


தேசிய காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினர்களின் கூட்டத்திலிருந்து தேசிய காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபைப்பாளருமான முன்னாள் மாகாண சபையின் தவிசாளர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ்  அவரது ஆதரவாளர்கள் சகிதம் வெளிநடப்பு செய்துள்ளார்.
 
இன்று காலை அக்கரைப்பற்று ஹோட்டலில் இடம்பெற்ற உயர்பீட கூட்டத்திலிருந்தே அவர் வெளியேறியுள்ளார்.

இது தொடர்பில் உயர்பீட கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி பாயிஸ் , தேசிய காங்கிரஸினால் தலைமைத்துவத்தினால் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி விடயங்கள் உட்பட  அனைத்து விடயங்களிலும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தே  வெளிநடப்பு செய்துள்ளார். 

இதனிடையே இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறவிருந்த செயலாளர் மாநாட்டிலும் அவரும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்காது வெளிநடப்பு செய்துள்ளதாகவும் அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா