VI: சவூதி அரேபிய பிரமுகர் வழங்கியுள்ள பத்து இலட்ச ரூபா பணத்தை ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மறுத்தால் அப் பணம் திருப்பி அனுப்பப்படும் என்று பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்
.
இலங்கைக்கு கடந்தவாரம் விஜயம் செய்த சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகர், இலங்கை ஊடகங்களில் ரிசானா நபீக்கின் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை மக்களின் உள்ளக் கிடக்கைகளை அறிந்து தனது சொந்த பணத்தில் 10 இலட்சம் ரூபாவை வழங்கினார்.
ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வழங்கும்படி கூறி அவர் அப்பணத்தை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கையளித்துள்ளார்.
இந்நிலையில் சவூதி அரேபிய அரசு வழங்கும் பணத்தை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பணத்தை வழங்க நேற்று மூதூருக்கு செல்லவிருந்ததாகவும் ரிசானாவின் தாயாரின் அறிவிப்பை அடுத்து மூதூர் விஜயத்தை ஒத்திவைத்ததாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.







0 comments:
Post a Comment