VI:இலங்கை பெண்கள் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக செல்வதை தடுப்பதற்கு தற்போதை நிலைமையில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு பணிப்பெண்கள் சவூதி செல்வதை தடுத்தால் பாரிய விளைவுகளை சந்திக் நேரிடும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ரிசானா நபீக்கிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் சவூதி அரேபியாவுக்கு செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கை குறையவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார சுட்டிகாட்டியுள்ளார்.
பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதனை நிறுத்தக் கோரி பெண்கள் உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உள்நாட்டு பணியாளர்கள் சவூதி அரேபியாவுக்கு வழமைப் போன்று செல்கின்றனர். அவர்கள் செல்வதை கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியாது. அவ்வாறு அவர்களை கட்டுப்படுத்த எம்மிடம் எவ்வித காரணமும் இல்லை. இதேவேளை எமது கொள்கையை மாற்ற வேண்டுமாயின் உயர் இடத்திலிருந்து அறிவுறுத்தல் வரவேண்டும். அதைவிடுத்து தனிமனிதனான நான் என்ன செய்யமுடியும்.
அவ்வாறு பணிப்பெண்கள் சவூதிக்கு செல்வதை நாம் நிறுத்தினால் பின்னால் பாரிய விளைவுகளையும் சந்திக்க நேரிடும். அதாவது சவூதியில் தற்போது பணிப்புரியும் ஆறு இலட்சம் பேர் வேலையை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் தெரிவித்தார்
0 comments:
Post a Comment