TM:அம்பாறை, வடினாகல பிரதேசத்தில் இன்று மீண்டும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.இதற்கு முன்னரும் இவ்வாறு பூமியதிர்ச்சி ஏற்பட்டபோதிலும் அது இயற்கையாக ஏற்பட்ட பூமியதிர்ச்சி இல்லை என்று புவியியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்தனர்.
பூமியதிர்வை கண்டறிவதற்கான சாதனங்களை பொருத்திவிட்டு சென்ற போதிலும் பூமி அதிர்வதற்கான காரணத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியமுடியவில்லை.
அதுமட்டுமன்றி அம்பாறையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
அம்பாறை- கண்டி வீதியில் 69 ஆவது மைல்கல்லுக்கு அருகிலுள்ள தற்காலிக பாலம் உடைந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியின் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment