கிழக்கு மாகாண மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கண்டறிந்து தீர்வளிக்கும் வகையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் அக்கரைப்பற்று மாநகர சபை மக்களின் நலன் கருதி அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிவதற்கான மக்கள் சந்திப்பு இன்று (12) அக்கரைப்பற்று அதாஉல்லாஅரங்கில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர பிரதி மேயர் எம்.ஏ. றிஷhம் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல். உவைஸ், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத், கிழக்கு மாகாண அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் கியாவுத்தீன், உதவிச் செயலாளர் எம்.ஐ. சலாவுதீன். அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. றாசீக் மற்றும் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.நஜிமுதீன் உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அதிகளவிலான மக்கள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் தொடர்பான தமது பிரச்சினைகள், தேவைகளை முன்வைத்து அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக் கொண்டனர்.
0 comments:
Post a Comment