TCN : வாழை மரம் வாழ்க்கையில் ஒரு தடவைதான் குலை தள்ளும். அது தெரிஞ்ச சமாச்சாரம் தானே என்பீர்கள்.
அது சரி. அந்தக் குலை வழமையில் உச்சியில்தான் தள்ளும். ஆனால் இங்கு ஒரு வாழை மரம் இடைநடுவில் பொத்துக்கொண்டு குலை தள்ளியிருக்கிறது.
இது அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் இடம்பெற்று இருக்கின்றது. இந்த அதிசயம் 09 ம் பிரிவில் உள்ள திருமதி கண்ணகை தியாகராஜா என்பவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. இன்றும் அதனைக் காணலாம்.
அதனையும் வீட்டு உரிமையாளரையும் பார்வையிடுவோரையும் படங்களில் காணலாம்.
ஆனால் இப்படியாக வாழைகள் இடையில் மிகச் சின்னதாக குலை தள்ளுவதை சிலர் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இவ்வளவு பெரிய குலை இடையில் தள்ளுவது இதுவே முதன் முறையாகக் கூட இருக்கலாம்.











0 comments:
Post a Comment