-ஹனீபா-
நேற்று பெய்த அடைமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்துப் பாதைகள் தடைப்பட்டுள்ளன.
நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்ததனால் அம்பாறை மாவட்டத்pலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது இதனால் சில வான்கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்தும் வெள்ளம் கரைபுரண்டு செல்கின்றன.
இதனால் சம்மாந்துறை காரைதீவு வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதி, கல்முனை நாவிதன்வெளி பிரதேசத்துக்கான கிட்டங்கி தாம்போதி, சம்மாந்துறை மண்டூர் வீதியிலுள்ள முறிகண்டி வீதி, சம்மாந்துறை அம்பாறை சம்மாந்துறை வீதியிலுள்ள வளத்தாப்பிட்டி வீதி, அம்பாறை இங்கினியாகலை வீதியிலுள்ள கொண்டவட்டுவான் அனைக்கட்டு வீதி என்பவற்றின் மேலாக வெள்ள நீர் பல அடிகள் பாய்ந்து செல்வதனால் அவ்வீதிகளில் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை தோன்றின.
மேலும் வான் கதவுகள் திறக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.
அவசர பணிகளின் நிமித்தம் பிரயாணம் செய்ய வேண்டியுள்ள வாகனங்களின் சாரதிகள் மிக அவதானத்துடன் பிரயாணங்களை மேற்கொள்ளுமாறு குறித்த பிரதேசங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள இரனுவத்தினரும் பொலிசாரும் சாரதிகளை அறிவுறுத்தினர்.
இதே சமயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் வெள்ளத்தினால் வீடுகள், வீதிகள்,மதஸ்தலங்கள்,பாடசாலைகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.










0 comments:
Post a Comment