இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/26/2013

வெள்ளம் காரணமாக வண்ணாத்திக் குளம் உடைப்பெடுப்பு Photos


-ஹனீபா-
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வண்ணாத்திக் குளம் நேற்றைய தினம் (25) உடைப்பெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இக்குளக்கரை வீதியூடாக பாடசாலைக்க செல்லும் இப்பிரதேச மாணவர்களும், விவசாயிகளும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இதனை துரிதமாக திருத்தியமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரி நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.ஐ.தஜாப்தீன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாதாக தெரிவித்தார்.

மேலும்  இவ்விடயம் தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா