இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/26/2013

பெறாமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பா கைது!


Vi: 15 வயதான பெறாமகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த 40 வயதுடைய சித்தப்பா கிளிநொச்சிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வட்டகச்சிப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி 15 வயதுச் சிறுமியொருவரை அவரின் சித்தப்பா தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இம் முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபரைக் கைது செய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் போது குறித்த சிறுமியை அந்நபர் தொடர்ந்து பல நாட்களாக பாலியல் பலாத்காரம் புரிந்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.


குறித்த நபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா