(ஹனீபா)
2013ம் ஆண்டு நடைபெறவுள்ள தேசத்துக்க மகுடம் (தயட்ட கிருள்ள) தேசிய கண்காட்சி அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை ஹாடி தொழில் நுட்பக் கல்லூரி பிரதேத்தில் பிரமாண்டமான முறையில் மார்ச் மாதம் 23ம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தின் தலைவரும் தொலைத் தொடர்புகள் தகவல் தெழில்நுட்ப அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
தயட்டக்கிருள தேசத்தக்கு மகுடம் கண்காட்சித் திடலில் தற்போது இடம் பெற்றுவருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆரயம் முகமாக அண்மையில் (17) அப்பிரதேத்துக்கு வருகை தந்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்தத் தேசத்துக்கு மகுடம் இக்கண்காட்சி ஏழு (7) தினங்களுக்கு நடைபெறவுள்ளது இக்கண்காட்சியில் பிரதிபலிக்கும் நாட்டின் அபிவிருத்தி திட்டங்ளையும் இந்த நாட்டிலுள்ள சகலமக்களும் வருகைதந்து அவதானிக்க வேண்டுமென்பது எனது எதிர் பார்ப்பாகும் இதற்காக நாட்டு மக்கள் அனைவரையும் நான் கௌரவமாக அழைக்கின்றேன்.
இங்கு எமது நாட்டின் சகல விடயங்களையும் பிரதிபலிக்கும் வகையில் காட்சிக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளது தற்போது பெரும்பாலான வேலைகள் முடிவடைந்துள்ளது. எஞ்சியுள்ள வேலைகள் அனைத்தையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு பொறுப்பாக்கப்பட்ட அதிகாரிகளை நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இக்கண்காட்சியினை பார்வையிட வருகின்ற மக்களுக்கான சகலவிதவசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம் எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தர்.
இந்த விஜயத்தின் போது அமைச்சருடன் அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment