PU:கேரளாவில் அரசு ஐடிஐ மாணவர்கள் சிலர் மார்பிங் செய்யப்பட்ட தங்களது ஆசிரியையின் நிர்வாணப் படத்தை செல்போனில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோட்டயத்தில் அரசு ஐடிஐ உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கானோர் படிக்கின்றனர். அங்கு தற்காலிக ஆசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அந்த ஆசிரியையின் நிர்வாணப் படம் மாணவர்களின் செல்போனில் உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை ஐடிஐ முதல்வரிடம் புகார் கூறினார். இதையடுத்து சந்தேகத்துக்குரிய 20 மாணவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். ஆனால் படம் எதுவும் இல்லை.
இருப்பினும் சந்தேகம் போகவில்லை. ஒருவேளை மாணவர்கள் படத்தை அழித்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அனைவரின் சிம் கார்டுகளையும் தனியாக எடுத்து செல்போன் நிபுணர்களிடம் கொடுத்து ஆய்வு செய்தனர். அப்போது ஆசிரியையின் நிர்வாணப் படம் அதில் இருந்தது தெரிய வந்தது. ஆனால் இது ஒரிஜினல் படம் இல்லை.
மாறாக மார்பிங் செய்யப்பட்ட படமாகும். சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு பேஸ்புக் பக்கம் உள்ளது. அதிலிருந்து அவரது படத்தை எடுத்து அதை நிர்வாணமான ஒரு பெண்ணின் உடலோடு இணைத்து மார்பிங் செய்துள்ளனர். அந்த ஆசிரியை மிகவும் கண்டிப்பானவராம்.
மாணவர்களிடம் கண்டிப்புடன் அவர் நடந்து கொண்டதால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் ஆசிரியைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸிலும் புகார் தரப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment