AD- இளம் குடும்பஸ்தர் ஒருவரும் யுவதி ஒருவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பமொன்று கினிகத்தெனை, கெனில்வேர்த், அல்லித் தோட்டம் மூன்றாம் தோட்டப் பிரிவில் இன்று (22) இடம் பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய ஆணொருவரும் 24 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த யுவதி குறிப்பிட்ட நபரின் மனைவியின் தங்கை என்பது என தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட இருவரும் கொழும்பு கல்கிஸ்ஸை பகுதியில் ஒரே இடத்தில் வேலை செய்கிறன்றனர்.
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த இவர்கள் நேற்று முன்தினம் (21) மாலை 6 மணியளவில் கொழும்பு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
இந்த நிலையில் இன்று (22) கெனில்வத்த தோட்டத்தில் கொழுந்து பறிக்கச் சென்ற தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளுக்கிடையில் கட்டிப்பிடித்தப்படி இரண்டு சடலங்கள் கிடப்பதைக் கண்டு கினிகத்தேனை பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதன் பின்பு சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment