இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/22/2013

இசெட் புள்ளி சிக்கலில் தவித்த மாணவர்களுக்கு 4ம் தடவை பரீட்சை எழுத வாய்ப்பு


TN:2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட் சைக்குத் தோற்றி இஸட் புள்ளி பிரச்சினைக்கு முகங்கொடுத்த மாணவர்கள் நான் காவது தடவை யாகவும் பரீட்சையில் தோற்றுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுவிடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு அமைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச் சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத் திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, இஸட் புள்ளி பிரச்சினைக்கு முகம்கொடுத்த மாணவர்கள் முன்னர் தாம் தோற்றிய பாடத்திட்டத்துக்கு அமைய இவ்வருடம் 2013ஆம் ஆண்டு இறுதித் தடவையாக நான்காவது முறை பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
எனினும், இவர்கள் 2013/2014 பல்கலைக்கழக கல்வியாண்டின் மூலமே பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா