முஸ்லிம் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று
இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் ஜாதிக
ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையில் கடும் சொற்போர்
மூண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து எவருமே பேசுகிறார்கள் இல்லை. ஆனால்
முஸ்லிம் அடிப்படைவாதம் இலங்கையில் வளர்ந்து வருகிறது. இது ஆபத்தானது என
சம்பிக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌஸி, ரவூப் ஹக்கீம்,
ஏ.எல்.எம்.அதாவுல்லா, றிசாத பதியுதீன் ஆகியோர் ஒருமித்த குரலில் கருத்து
வெளியிட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முஸ்லிம் எதிர்ப்பு
கருத்துக்களை முன்வைத்த போது முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு
முன்னிலையில் கடும் தொனியில் பதில் வழங்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ”உனக்கு ஹலால் விருப்பமில்லையென்றால் அந்த உணவை
சாப்பிடாதே” என அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை பார்த்து அமைச்சர் பௌஸி
குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் பர்தா அணிவது அதிகரித்து விட்டதென அமைச்சர் சம்பிக்க ரணவக்க
குற்றம் சுமத்திய போது குறிக்கிட்டுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,
இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம்கள் பின்பற்றுவதை நீங்கள் சந்தேகத்துடன்
நோக்காதிர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமை என கூறினார்.
0 comments:
Post a Comment