-ஹனீபா-
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டதை அடுத்து கல்முனை அஷ;ரப் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் சுகாதாரக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கரையோரப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விளிப்புணர்வூட்டும் செயலமர்வு நேற்று (18) வைத்திய சாலையின் கேட்போர் கூடத்தில் வைத்திய அத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் வளவாளர்களான கல்முனை அஷ;ரப் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் பொது விஷேட வைத்திய நிபூணர் வைத்திய கலாநிதி எம்.சுகைப், சிறுபிள்ளை வைத்திய நிபூணர் வைத்திய கலாநிதி எஸ்.சிவகாந்தன் ஆகியோர்களால் டெங்கு நோயினை அடையாளம் காணல், அவர்களை வைத்திய சாலையில் அனுமதித்தல், அதற்கான சிகிச்சை முறைகள், பராமரிப்புமுறை மற்றும் அந்நோயை கட்டுப்படுத்தும் முறைகள் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கினர்.
இச் செயலமர்வில் அம்பாறை கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் கல்முனை அஷ;ரப் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் பொதுச சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம்.இத்ரீஸ் கருத்து தெரிவிக்கையில் இதுவரை இவ்வைத்திய சாலையில் 131 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் அவற்றில் 118 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் 13 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இவர்கள் கல்முனை,சாய்ந்தமருது,காரைதீவு,நிந்தவூர்,சம்மாந்துறை,அட்டாளைச்சேனை, பொத்துவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment